Close Menu
    What's Hot

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.
    இந்தியா

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    Editor web3By Editor web3May 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mallikarjun Kharge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விலை உயர்த்தப்பட்ட வெறும் நான்கே நாட்களில், மோடி அரசு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தன் தோல்விகளை மறைத்து, அதன் பாரத்தை மக்கள் மீது சுமத்தும் முயற்சியில் இந்த அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், “சாமானிய மக்களைக் கொள்ளையடித்து, அமெரிக்காவில் அதானிக்கு தடையில்லாச் சலுகை வழங்குவதுதான் மோடியின் ‘காம்ப்ரமைஸ் மாடல்’ என்று விமர்சித்துள்ள அவர், உலகிற்கே விஸ்வகுரு என்று போலியான பெருமை பேசும் பிரதமர் மோடி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான “அனுமதிக்கு” காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்குமாறு அமெரிக்காவிடம் கெஞ்சியுள்ளார்.

    இப்படிச் செய்யும் ஒவ்வொரு முறையும், 140 கோடி இந்தியர்களின் பெருமைக்கு அவர் கங்கம் விளைவிக்கிறார். இதற்கு முன்பு எந்தவொரு இந்திய அரசாங்கமும் இந்த அளவிற்குத் தாழ்ந்து போனதில்லை. மத்திய அரசின் கூற்றுப்படி, எண்ணெய் வாங்க அனுமதி கிடைத்துவிட்டது என்றால், பிறகு ஏன் பெட்ரோல்-டீசல் விலை உயர்வின் பாரத்தை சாமானிய மக்கள் மீது சுமத்த வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நாட்டில் நெருக்கடி ஏற்பட்டபோது, அவர்கள் தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்தனர். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க சாதுரியமான வார்த்தைகளால் திட்டங்களை வகுத்தனர். அதே நேரத்தில், தங்களுக்கு நெருக்கமான நண்பரையும் (அதானி) பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

    வெளிநாடுகளில் ஸ்பான்சர் செய்யப்பட்ட பிஆர் (PR) நிகழ்ச்சிகளை நடத்துவதால் மட்டும் யாரும் ‘விஸ்வகுரு’ ஆகிவிட முடியாது. நாட்டின் பிரதமராக மக்களுக்குப் பதில் சொல்லும் கடமை உங்களுக்கு உள்ளது.

    உண்மையான கேள்விகளிலிருந்து ஓடி ஒளியாதீர்கள்… நீங்கள் மாம்பழங்களை எப்படிக் கடித்துச் சாப்பிடுகிறீர்கள் என்பதிலோ, அல்லது எந்தச் சத்து பானத்தைக் குடிக்கிறீர்கள் என்பதிலோ மக்களுக்குச் சிறிதும் ஆர்வமில்லை.

    தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க நீங்கள் உண்மையில் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் பதிலளித்தால் மட்டுமே, மக்கள் உங்களை அவர்களின் உண்மையான “பிரதம சேவகர்” என்று அழைப்பார்கள்; இல்லையெனில், நீங்கள் வெறும் “பிரச்சாரகர்” என்ற நிலையிலேயே நின்றுவிடுவீர்கள் என்று தனது பதிவில் கடுமையாகத் சாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
    Editor web3
    • Website

    Related Posts

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026

    ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.