குடியரசு தலைவர், ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்த காலநிர்ணயம் செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை நான்காவது நாளாக நடந்துவருகிறது .
இன்றைய தினம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
சட்ட மசோதாக்களுக்கு காலநிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்துக்கு என்ன பதில் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
இரண்டாவதாக ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியுமா? ஆளுநருக்கு வீடோ அதிகாரம் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி
மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்ப இயலுமா? அதன் விளைவுகள் என்ன? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி