ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று மாலை யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.

பல மாதங்கள் திட்டமிட்டு நடந்ததாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஒரு நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்; மற்றொருவர் சுடப்பட்டு, சிகிச்சைக்காக காவல் கட்டுப்பாட்டில் உள்ளார். வெடிபொருள் தேடுதல் வேட்டையும் தொடர்கிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

இந்தநிலையில் போண்டி கடற்கரையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த துயரமான சம்பவத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்ப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version