மகாராஷ்டிராவில், தகாத உறவால் தனது கணவரை திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நலசோப்ரா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் சவான் – கோமல் சவான் தம்பதி. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். கோமலுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவாரான மனு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவாகவும் மாறியுள்ளது.
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனுவுடன் வெளியே செல்வதும், உல்லாசமாக இருப்பதுமாக இருந்து வந்துள்ளார் கோமல். இது குறித்து அக்கம் பக்கத்தினர் விஜய் சவானிடம் தெரிவிக்க, அவரோ மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விஜய் சவானை மீறி மனுவுடனான உறவை நீடித்து வந்துள்ளார் கோமல்.
கணவர் உயிருடன் இருக்கும் வரை தனது உறவுக்கு அவர் இடையூறாக இருப்பார் என்பதால், விஜய் சவானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார் கோமல். அதன்படி விஜய் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மனு, பின்பக்கமாக அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மனுவுடன் சேர்ந்து கோமலும் விஜய்யை கடுமையாக தாக்க, இதில் நிலை தடுமாறிய விஜய் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு இருவரும் சேர்ந்து விஜய்யின் உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டிற்குள்ளேயே அவரது உடலை புதைத்து, அந்த இடத்தில் புதிய டைல்ஸ் கற்களை பதித்துள்ளனர்.
காணாமல் போன விஜய் சவானை, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடி வர, கோமல் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. விசாரித்ததில், வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை எனக் கூறி மழுப்பியுள்ளார். இதனை நம்பாத விஜய்யி சகோதரர்கள் வீட்டை சோதனையிட்ட போது, ஒரு இடத்தில் மட்டும் புதிய டைல்ஸ் கற்கள் பதிந்திருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.
அங்கிருந்து துர்நாற்றமும் வீச, உடனே அந்த இடத்தை தோண்டி பார்த்தப் போது, விஜய் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் விஜய் உடலை மீட்டனர். மேலும் தலைமறைவான கோமல் மற்றும் மனு ஆகியோரை தேடி வருகின்றனர்.