Close Menu
    What's Hot

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!
    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அசோக்குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசோக்குமாருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் அவர் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ள முடியும் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அப்படி எதுவும் இல்லை என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் பதிலளித்தார்.

    இதையடுத்து, அமெரிக்காவில் அசோக்குமார் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத்துறை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Ashok Kumar Chennai High Court Enforcement Directorate Foreign Travel Legal Matter Medical Treatment Senthil Balaji அசோக்குமார் அமலாக்கத்துறை சட்ட விவகாரம் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவ சிகிச்சை வெளிநாடு பயணம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகணவரை கொன்று வீட்டினுள் புதைத்த மனைவி… தகாத உறவால் நேர்ந்த கொடூரம்…
    Next Article பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸின் “தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்..!
    Editor TN Talks

    Related Posts

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    தலைவா தரணி ஆள வா! அண்ணாமலைக்கு அழைப்பு – பாஜகவில் பூகம்பம்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026

    நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!. டாப்பில் இடம்பிடித்த இந்திய ஜாம்பவான்கள்!

    May 31, 2026

    திருவள்ளுவருக்கு காவி உடை – ஆளுநர் அர்லேகருக்கு அமைச்சர் வன்னியரசு கண்டனம்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.