நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளி தொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.

மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவை சபாநாயகரின் அறையில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டார். சபாநாயகரின் அறையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சட்டவிரோதமாக வீடியோ பதிவு செய்ததாக அவர் குற்றம்சாட்டினார். அந்த வீடியோவில் 20 முதல் 25 வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்து, அவரை திட்டுவதையும், பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டுவதையும் காட்டுகிறது. மேலும் சபையில் விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கே தங்களின் கட்சி முக்கியத்துவம் அளிக்கிறது; மிரட்டல் அரசியலை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என ரிஜிஜு தெரிவித்தார்.

https://x.com/KirenRijiju/status/2021812385460420837?

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர், “சுமார் 20 முதல் 25 எம்.பி.க்கள் மக்களவை அறைக்குள் நுழைந்து அவரை திட்டினர். நானும் அங்கு இருந்தேன். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் எளிமையானவர், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.  மேலும், “இந்த சம்பவம் நடந்தபோது காங்கிரஸின் மூத்த தலைவர்கள், அதில் பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி.க்களும் அங்கே இருந்தனர். அவர்கள் மற்ற உறுப்பினர்களை வாக்குவாதத்தில் ஈடுபட தூண்டினர்,” என்றும் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறையில் சில எம்.பி.க்கள் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சபாநாயகரின் அறை, அவையின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், அங்கு எந்தவிதமான வீடியோ பதிவும் செய்வது விதிமுறைகளுக்கு எதிரானது.

இந்த சம்பவம் பிப்ரவரி 4ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ பதிவு செய்யப்பட்ட விதம் மற்றும் அது வெளியானது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட எம்.பி.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version