புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 3 மாணவர்கள் சீர்திருத்தப் பள்ளியின் பின்புறம் சுவர் வழியாக எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் ஒருவர் காரைக்காலைச் சேர்ந்தவர், மற்ற 2 பேர் புதுவையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சிறுவர் சீர்திருத்தம் நிர்வாகம் சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version