Close Menu
    What's Hot

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு இன்று பணி நிறைவு நாள்!
    இந்தியா

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு இன்று பணி நிறைவு நாள்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PRGavai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று (நவ. 21) பணி நிறைவு நாளையொட்டி கடைசி நாள் வழக்கு விசாரணைகளை மேற்கொள்கிறார்.

    நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் 14.05.2025-ல் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த 2000ம் ஆண்டில் ஜனவரி 17ல் நாக்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டார். 2003 நவம்பர் 14ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2005 நவம்பர் 12ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி உயர்வு பெற்றார்.

    இந்தநிலையில், கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த காலகட்டங்களில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், வணிக தகராறுகள், நடுவர் சட்டம், மின்சார சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், கல்வி தொடர்பான விஷயங்கள் என பல்வேறு வழக்குகளை சுமார் 700 அமர்வுகளில் பி.ஆர்.கவாய் கையாண்டுள்ளார். குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த அரசியல் அமர்வு தீர்ப்புகள் உள்பட 300 தீர்ப்புகளை அவர் எழுதி உள்ளார்.

    மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதித்துறை காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்ற தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பி.ஆர்.கவாய் இடம்பெற்றார்.

    இந்தநிலையில், வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் பி.ஆர்.கவாய் ஓய்வு பெற உள்ளார். இதனால், வெள்ளிக்கிழமையான இன்று (நவ. 21) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணைகளை அவர் மேற்கொள்கிறார். நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெறுவதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்க உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதயவுசெய்து இதை வாங்கி உங்கள் உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள் – டாக்டர்களின் எச்சரிக்கை !!!
    Next Article வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி!
    Editor TN Talks

    Related Posts

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    July 5, 2026

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.