Close Menu
    What's Hot

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ரயில் டிக்கெட் முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையில் மாற்றம்: பயணிகளுக்குப் பெரும் நிம்மதி!
    இந்தியா

    ரயில் டிக்கெட் முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையில் மாற்றம்: பயணிகளுக்குப் பெரும் நிம்மதி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250706 WA0001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    Noரயில் பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றம் கொண்டு வந்துள்ளது. இனிமேல், ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்படும். தெற்கு ரயில்வேயில் இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இதனால், கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகாத பயணிகள் தங்கள் பயணத் திட்டம் குறித்து மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனப் பயணிகள் தரப்பிலிருந்து ரயில்வே துறைக்குத் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 4 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக அதிகரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையை அறிவித்துள்ளது.

    புதிய நடைமுறையின்படி:

    அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்பட வேண்டும்.

    மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.

    இந்த நடவடிக்கையின் மூலம், காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) உள்ள பயணிகள் தங்கள் டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். இதன் வாயிலாக, கடைசி நேரப் பயணச் சிரமங்கள் தவிர்க்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

    தெற்கு ரயில்வே வணிகப் பிரிவு, இந்த 8 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடும் புதிய நடைமுறையைப் பின்பற்றுமாறு அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த மாற்றம் லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Ashwini Vaishnaw Indian Railways Passenger Convenience Railway Minister Reservation Chart Southern Railway Ticket Booking Train Schedule Travel Update Waiting List அஸ்வினி வைஷ்ணவ் இந்திய ரயில்வே காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் முன்பதிவு தெற்கு ரயில்வே பயண அறிவிப்பு பயணிகள் வசதி முன்பதிவு அட்டவணை ரயில் நேரம் ரயில்வே அமைச்சர்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
    Next Article இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்ட ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!
    Editor TN Talks

    Related Posts

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.