சமூக வலைதளங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பான வழக்கில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீது அமெரிக்க நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. நியூ மெக்சிகோ நீதிமன்றம் மெட்டா நிறுவனம் ரூ.567 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,800 கோடிக்கு மேல்) தொகையைச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இதில் 420 மில்லியன் டாலர்கள் இளையோர் மனநல சிகிச்சை சேவைகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது. மீதமுள்ள தொகைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு, தடுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்த வழக்கின் முதல் கட்டத்தில், குழந்தைகள் மனநல பாதிப்புக்கு மெட்டா நிறுவனமே காரணம் என்றும், தளத்தில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் குறித்த தகவல்களை மறைத்ததாகவும் கூறி ஜுரிகளில் ஒருமித்த தீர்ப்பு வழங்கப்பட்டு ரூ.375 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தீவிர வயதுச் சரிபார்ப்பு முறைகளைக் கொண்டுவருவதில் சில சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் உள்ளதாகக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்ஸ்டாகிராம் பரிந்துரை அல்காரிதம்கள், இந்திய சட்டங்களுக்கு இணங்குதல் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் உள்ளடக்கங்களைக் கையாள்வது தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகளால் மெட்டா நிறுவனத்தின் உயர்மட்டக் குழு தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் பதிவு தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் ஜோயல் கபிலன் தலைமையிலான குழுவினர் மத்திய IT அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்தின் போது, தளத்தில் “தீவிரமான பிரச்சினைகள்” இருப்பதை ஒப்புக்கொண்ட மெட்டா, டீஃபேக், குழந்தை பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் மற்றும் போலி கணக்குகளை எதிர்கொள்ளத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்துள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் IT துறைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் இன்னும் 3 முதல் 4 நாட்களுக்குத் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான ஆலோசனைகள் தொடரும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version