தைவானைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், தைபேயில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உலுக்கியது. தைவான் வானிலை ஆய்வு மையம் நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தைவானின் வடகிழக்கு கடற்கரை நகரமான இலெனில் சனிக்கிழமை இரவு 11:05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலென் கவுண்டி ஹாலுக்கு கிழக்கே 32.3 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

https://x.com/BaateinStockKi/status/2004941705997701568?

நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. தைவானில் கடந்த புதன்கிழமையும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலையில் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 17 பேர் இறந்தனர், மேலும் இது நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version