Close Menu
    What's Hot

    மக்களே!. SIR-ல் பேர் விட்டுப்போச்சா?. தமிழகம் முழுவதும் 2 நாட்கள் சிறப்பு முகாம்!.

    பார்லி.,க்குள் ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை

    டிச.31-க்குள் இதைச் செய்யாவிட்டால், ரூ.1000 கட்டணம் செலுத்தவேண்டும்!. முழுவிவரம் இதோ!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு
    உலகம்

    ‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    musk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பலனடைந்துள்ளது என உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார். அவருடன் அண்மையில் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் உரையாடி இருந்தார்.

    அது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், அதில் எலான் மஸ்க் பகிர்ந்து குறித்து விரிவாக பார்ப்போம். இதில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள், அமெரிக்க குடியேற்ற விதிகள் மற்றும் தனது குடும்பம் குறித்தும் மஸ்க் பேசியுள்ளார்.

    “அமெரிக்கர்களின் பணியை பிற நாட்டினர் பறிப்பதாக சொல்லும் கூற்றை பொறுத்த வரையில் அது எந்த அளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை. நிச்சயம் திறன் கொண்ட பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது என்பதை எனது நேரடி அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். அவர்களை கண்டறிவது பெரிய சவாலாக உள்ளது. சவாலான பணிகளை மேற்கொள்ள திறமைசாலிகள் வேண்டும். எனது நிறுவனம் அதில் கவனம் செலுத்துகிறது.

    எல்லை பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றத்தை நிச்சயம் தடுத்தாக வேண்டும். முந்தைய பைடன் தலைமையிலான ஆட்சியில் எல்லை பகுதிகளில் பலர் சட்டவிரோதமாக குடியேறினர். அதன் மூலம் ஆதாயம் அடைந்தனர். அதனால் சட்டவிரோத குடியேற்றம் கூடாது.

    அமெரிக்காவுக்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்க தேசம் பெரிதும் பலனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு திறமைசாலிகளின் தேவை உள்ளது. எனது நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் திறன் கொண்ட நபர்களுக்கு சராசரிக்கும் கூடுதலான ஊதியத்தை வழங்குகிறது.

    அதே நேரத்தில் சில நிறுவனங்கள் எச்1-பி விசாவை தவறாக பயன்படுத்துகின்றன. அது மோசமான போக்கு. அதை நிச்சயம் தடுத்தாக வேண்டும். ஆனால், அதற்காக எச்1-பி விசா வழங்குவதையே நிறுத்த வேண்டும் என சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில் இங்கு திறமைசாலிகளுக்கு தேவை உள்ளது.

    எனது மகன் பெயர் சேகர்: எனது இணையர் ஷிவோன் ஜிலிஸ் உடன் நான் பெற்ற மகன்களில் ஒருவருக்கு சேகர் என்ற இந்திய வம்சாவளியை சுட்டும் வகையிலான பெயரை சூட்டியுள்ளோம். சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை வைத்துள்ளோம். ஷிவோன் ஜிலிஸின் முன்னோர்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அது எப்படி என்று எனக்கு தெரியாது. அதனால் இந்த பெயரை வைத்தோம்” என அவர் தெரிவித்தார்.

    1983-ல் நோபல் பரிசு வென்ற இயற்பியலாளர் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தனது மகனுக்கு மஸ்க் சூட்டியுள்ளதாக தகவல். ஷிவோன் ஜிலிஸ் – மஸ்க் இணையருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். 2021-ல் இரட்டை குழந்தைகள், 2024 மற்றும் 2025-ல் தலா ஒரு குழந்தையையும் அவர்கள் பெற்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு!.
    Next Article சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி
    Editor TN Talks

    Related Posts

    ஜெலென்ஸ்கி – டிரம்ப் சந்திப்பு!. கீவில் பலத்த வெடி சத்தம்!. அலெர்ட் கொடுத்த அதிகாரிகள்!.

    December 27, 2025

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    December 26, 2025

    வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்புகிறது சீனா

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்களே!. SIR-ல் பேர் விட்டுப்போச்சா?. தமிழகம் முழுவதும் 2 நாட்கள் சிறப்பு முகாம்!.

    பார்லி.,க்குள் ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை

    டிச.31-க்குள் இதைச் செய்யாவிட்டால், ரூ.1000 கட்டணம் செலுத்தவேண்டும்!. முழுவிவரம் இதோ!.

    அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்த ஹிமந்த பிஸ்வா

    முன்னாள் பிரதமர் மன்மோகன் முதல் நினைவு தினம் அனுசரிப்பு: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    மக்களே!. SIR-ல் பேர் விட்டுப்போச்சா?. தமிழகம் முழுவதும் 2 நாட்கள் சிறப்பு முகாம்!.

    December 27, 2025

    பார்லி.,க்குள் ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.