Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி
    உலகம்

    சிறையில் இம்ரான்கான் உயிரோடு இருக்கிறார்: பிடிஐ கட்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakkkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் கூறி​யுள்​ளார்.

    பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான், ராவல்​பிண்​டி​யில் உள்ள சிறை​யில் கொலை செய்​யப்​பட்​டார் என ஆப்​கானிஸ்​தானில் உள்ள சமூக ஊடகங்​களில் கடந்த வாரம் தகவல் பரவியது.

    சிறை​யில் உள்ள இம்​ரான் கானை அவரது குடும்​பத்​தினர், அரசி​யல் கட்​சி​யினர் சந்​திக்க கடந்த ஒரு மாதத்​துக்கு மேலாக அனு​மதி அளிக்​கப்​பட​வில்​லை. இதனால் அவரது சகோ​தரி​கள் சிறை வாசலில் போராட்​டம் நடத்​தினர். அவர்​கள் மீது போலீ​ஸார் தாக்​குதல் நடத்​தினர். இம்​ரான் கான் உயிரோடு இருப்​ப​தற்​கான ஆதா​ரத்தை வெளி​யிட வேண்​டும் என அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்​தார்.

    இந்​நிலை​யில் பிடிஐ கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன், இம்​ரான் கான் குறித்து கூறிய​தாவது: இம்​ரான் கான் அடிலா சிறை​யில் உயிரோடு இருப்​ப​தாக எங்​களுக்கு பாகிஸ்​தான் அரசு உறுதி அளித்​துள்​ளது. அவரை தனிமைச்​சிறை​யில் அடைத்து வைத்​துள்​ளனர். நாட்டை விட்டு வெளி​யேறி, அவருக்கு பிடித்​த​மான இடத்​தில் அமை​தி​யாக இருக்​கும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது. இதற்கு இம்​ரான் கான் ஒப்​புக் கொள்ள மாட்​டார்.

    இம்​ரான் கானின் புகழை கண்டு பாகிஸ்​தான் அரசு பயப்​படு​கிறது. அதனால்​தான் அவரது படம் மற்​றும் வீடியோ வெளி​யிட அவர்​கள் அனு​ம​திக்​க​வில்​லை.

    கடந்த ஒரு மாத​மாக அவரை குடும்​பத்​தினர் மற்​றும் கட்சி தலை​வர்​கள் சந்​திக்க விடா​மல் அவரை தனிமைச் சிறை​யில் அடைத்து வைத்​திருப்​பது துரஅ​திர்​ஷ்டம். இது மனித உரிமை மீறல். ஏதோ ஒரு விஷ​யத்​துக்​காக அவருக்கு பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுப்​பது​போல் தெரி​கிறது.

    இம்​ரான் கான் சிறை​யில் இருந்​தா​லும், அவரது செல்​வாக்கு தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. அவரது பிடிஐ கட்சி பாகிஸ்​தான் இளைஞர்​களிடம் வலு​வாக வேரூன்​றி​யுள்​ளது. அவரது கொள்கை பல தரப்​பினரை ஈர்த்​துள்​ளது.

    பிடிஐ கட்​சிக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ளது. இம்​ரான் கான் சிறை​யில் இருக்​கும் படம் வெளிவந்​தால், அது மக்​களிடையே மிகப் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​ப​தால், அவரது போட்​டோவை வெளி​யிட பாகிஸ்​தான் அரசு அனு​ம​திக்​க​வில்​லை. இவ்​வாறு குர்​ராம்​ ஜீஷன்​ கூறி​னார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பலனடைந்துள்ளது’ – எலான் மஸ்க் பகிர்வு
    Next Article “அதிமுகவினர் கட்சி மாறவில்லை; ‘கிளை’தான் மாறி இருக்கிறார்கள்” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    July 16, 2026

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    July 16, 2026

    அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பு… ஜே.டி. வான்ஸுக்கு ஈரானின் ரகசிய அறிக்கை..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.