ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் தயாரிப்புகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாகக் கூறி பல ஆண்டுகளாகத் தொடரப்பட்டு வந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரப் பெருமளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த சட்டப்போராட்டங்களுக்குத் தீர்வு காணும் வகையில், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரின் கோரிக்கைகளை ஏற்றுத் தகுந்த இழப்பீட்டுத் தொகையைத் படிப்படியாக விடுவிக்க அந்நிறுவனம் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில்,  பாதிக்கப்பட்ட 76,000 பேருக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது; இதில் ரூ.29,000 கோடியை 2027-ஆம் ஆண்டிலும், எஞ்சிய தொகையை 2028-ஆம் ஆண்டிலும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத் தொகையை இரண்டு கட்டங்களாக முழுமையாகச் செலுத்தவும் சுமுகமான முறையில் வழக்குகளை முடிக்கவும் பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான இறுதி ஒப்புதல்கள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண தொகையை உரிய காலக்கெடுவிற்குள் வழங்குவதன் மூலம், பவுடர் தயாரிப்பு குறித்த நீண்டகாலச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version