அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மிகப்பெரிய நெருக்கடிக்கு தயாராகும்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரப்பரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – கஸா போர் ஆண்டு கணக்கில் நடந்து வருவதால் உலக நாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. உலக நாடுகளின் மோதலால் மூன்றாம் உலக போர் ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த உக்ரை – ரஷ்ய மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ஏற்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரஷ்ய, உக்ரைன் போரையும், இஸ்ரேல் போரையும் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். உக்ரைன், இஸ்ரேல் போர் ஓரளவுக்கு அமைதியாகி வரும் சூழலில் 2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான பெரிய நெருக்கடிக்கு தயாராகும்படி, நாடு முழுவதும் இருக்கும் மருத்துவனைக்கு பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
போர்க்காலத்தில் காயமடைந்து வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை பராமரிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டிய அவசியமும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச அளவில் மிகப்பெரிய மோதல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.