சீனாவில் உள்ள குவாங்டாங்-ஹாங்காங்-மக்காவ் கிரேட்டர் பே ஏரியா உலகின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியனை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க பேர்ல் நதியின் மேற்குக் கரையில், குவாங்சோவின் நான்ஷா மாவட்டத்தின் தெற்கு முனையில் ஜஹா கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பெரிய அளவிலான தடகளம் மற்றும் கால்பந்துக்காக 60,000 இருக்கைகள் கொண்ட மைதானம்.

கூடைப்பந்து மற்றும் பிற உட்புற நிகழ்வுகளுக்கு ஏற்ற 20,000 இருக்கைகள் கொண்ட உட்புற அரங்கம்.

4,000 இருக்கைகள் கொண்ட நீர் விளையாட்டு மையம். 50 மீட்டர் போட்டி நடத்தும் அளவுக்கு நீச்சல் குளம் மற்றும் டைவிங் கிணறு ஆகியவற்றை இந்த கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையம் உள்ளடக்கியுள்ளது.

சீனாவில் உள்ள பள்ளி கல்லூரி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் இந்த விளையாட்டு மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த விளையாட்டு மையம் சீன விளையாட்டுத்துறையை பிராந்திய மற்றும் தேசிய அளவில் மேம்படுத்தும்.

கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையத்தின் கட்டுமானம் ஆகஸ்ட் 31, 2023 அன்று தொடங்கியது. சுமார் இரண்டு ஆண்டுக்குள் இந்த கட்டுமானம் முடிந்து இருக்கிறது. ஒரு லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டு மையம் உலகில் உள்ள அனைவரது கவனத்தையும் மிகப்பெரிய அளவில் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் இதே போல ஒரு விளையாட்டு மையம் நம் நாட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை தூண்டி உள்ளது.
