இந்தியப் பெண்ணான நிகிதா கோடிஷாலா அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு முக்கியப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலனை இன்டர்போல் கைது செய்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவி நிகிதா ராவ் கோடிஷா, மேரிலாந்தில் கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், நிகிதாவின் உடல், அவரது முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுனை, இன்டர்போல் காவல்துறையினர் திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழ்நாட்டில் கைது செய்தனர். கொலைக்குப் பிறகு அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டன.
இந்தியா டுடேவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 26 வயதான அர்ஜுன், அமெரிக்க மாநிலமான மேரிலாந்து நகரத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தார், அதில், தனது காதலியை காணவில்லை என்றும், அவர் கடைசியாக புத்தாண்டு தினத்தன்று தனது குடியிருப்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஜனவரி 3 ஆம் தேதி, ஹோவர்ட் கவுண்டி காவல் துறை அதிகாரிகள், செகந்திராபாத்தைச் சேர்ந்த 27 வயது நிகிதா ராவ் கோடிஷாலாவின் உடலை சர்மாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டுபிடித்தனர். அதற்குள், சர்மா தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன நபரின் புகாரைப் பதிவு செய்த உடனேயே, டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று , பின்னர் இந்தியாவுக்கு விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அதாவது, நிகிதாவின் கொலைக்குப் பிறகு, இன்டர்போல் அமெரிக்கக் காவல் துறையுடன் இணைந்து அர்ஜுன் சர்மாவை உடனடியாகக் கண்காணிக்கத் தொடங்கியது. மற்ற முகமைகளுடன் இணைந்து செயல்பட்ட இன்டர்போல், அர்ஜுனை தமிழ்நாட்டில் கைது செய்தது. முக்கியமாக, நிகிதாவைக் காணவில்லை என்று அர்ஜுனே முன்வந்து காவல்துறையில் புகார் அளித்தார். புத்தாண்டு தினத்தன்று இரவு முதல் நிகிதாவைக் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் அமெரிக்கக் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.
அர்ஜுன் ஷர்மா அமெரிக்கக் காவல்துறையில் புகார் அளித்த அன்றே இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இதை அமெரிக்கக் காவல்துறையினரே உறுதிப்படுத்தினர். இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறை, அவரது அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோதனையிட்டது. அங்கு சென்றபோது, பல கத்திக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கிடந்த நிகிதாவின் உடலை காவல்துறை கண்டெடுத்தது.
கோடிஷாலா மேரிலாந்தின் எலிகாட் நகரில் வசித்து வந்தார், அங்கு அவர் தரவு ஆய்வாளராகப் பணிபுரிந்தார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் சுகாதார தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிப்பை முடித்திருந்தார் . இதனை தொடர்ந்து . பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
