ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக ‘நியூயார்க் போஸ்ட்’ (New York Post) வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை திரட்டிய தகவல்களின்படி, மொஜ்தபா கமேனி தனது சிறுவயதில் ஒரு ஆசிரியருடன் நெருக்கமான உறவில் இருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் மிக உயரிய பதவியில் இருப்பவர் குறித்து இத்தகைய தனிப்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த ரகசியத் தகவல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கூறியபோது, அவர் அதைக் கேட்டு சிரித்ததாகக் கூறப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்கனவே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இத்தகைய செய்திகள் வெளியாவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஈரானில் இஸ்லாமியச் சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கை என்பது மிகக் கடுமையான குற்றமாகும். இதற்குச் சில நேரங்களில் மரண தண்டனை வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய கடுமையான விதிகளைச் செயல்படுத்தும் ஒரு நாட்டின் தலைவரே, அதற்கு மாறாக இருக்கிறார் என்ற செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
