லிபிய மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் துருக்கி தலைநகர் அங்காரா அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமான விபத்தில் பலியானவர்களில்  லிபியாவின் உயர் இராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல்-ஹதாத்தும் ஒருவர் , இவருடன் சேர்த்து நான்கு மூத்த லிபிய இராணுவ அதிகாரிகள், மூன்று குழு உறுப்பினர்கள் என 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் விமானப் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, லிபியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்புக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடியாக அமைந்தது. 

மேலும் அங்காராவின் எசன்போகா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது , பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துருக்கிய மற்றும் லிபிய அதிகாரிகள், இந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை மாலை , உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணியளவில் அங்காராவின் எசன்போகா விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. டசால்ட் பால்கன் 50 என்ற ஜெட் விமானம் , லிபியாவுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தது.

புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு , விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு விமானத்துடனான தொடர்பை இழந்தது. தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானம் அங்காராவின் தெற்கே அமைந்துள்ள ஹேமனா மாவட்டத்திற்கு அருகே அவசர தரையிறங்கும் சமிக்ஞையை அனுப்பியதாகக் கூறப்படுகிறது .   

லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் டிபீபே இந்த இறப்புகளை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார், மேலும் இந்த சம்பவம் “தேசத்திற்கு துயரமானது மற்றும் மிகவும் வேதனையானது” என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version