கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார்.

உக்ரைன் , ரஷ்யா இடையே இன்றுடன் சுமார் 1 ஆயிரத்து 400வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சம்பந்தப்பட்ட இராஜதந்திர முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ரஷ்யாவின்  தொடர் வான்வழித் தாக்குதல்கள் அரங்கேறும் நிலையில், போப் 14வது லியோ, கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டதால் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

ரோம் அருகே உள்ள காஸ்டல் காண்டோல்ஃபோவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லியோ, “நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமும் ஒரு நாள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு, எங்கள் கடவுளின் பிறந்த நாளிலாளவது அமைதி நிலவ வேண்டும் என்று நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்றும் உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கையுடன் தான் இருப்பதாக கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version