நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினம் முன்னாள் எம்பி சௌந்தர்ராஜன்  தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
வள்ளியூரில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லாசர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வள்ளியூர் பேரூர் கழகச் செயலாளர் பொன்னரசு முன்னிலை வைத்தார்.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அதிமுக பொருளாளருமான  சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எட்வர்ட் சிங், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட பாசறை செயலாளர் இந்திரன்,  மாவட்ட மீனவர் அணி துணைத்தலைவர் சோரிஸ் கோஸ்தா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் வெண்ணிமலை யாதவ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சண்முக பாண்டியன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version