ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் போர், பலரும் கணிப்பதை விட மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நெதன்யாகு, இந்தப் போர் குறித்த பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  முதலில் தான் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான செய்திகளை மறுத்த அவர் நான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதை நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக தான் என தெரிவித்தார். ஈரானால் இனி தலை தூக்கவே முடியாது என கூறியிருக்கிறார். ஈரான் தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது என்றும் அந்த நாடு யுரேனியம் செறிவூட்டும் மற்றும் அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரித்ததை இனி நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

மிக மோசமான நிலைக்கு ஈரான் சென்று விட்டது என கூறியிருக்கும் அவர் தேவை இருக்கும் வரை ஈரான் போர் நீடிக்கும் என கூறியிருக்கிறார். இருந்தாலும் நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு தென்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் நாட்டில் ஆட்சியாளர்கள் மத்தியிலேயே தற்போது பிளவு ஏற்பட்டு இருக்கிறது என கூறுகிறார்.

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு துறை செயலாளர் அலி லர்ஜானி, படைத்தளபதி சுலைமான் என முக்கியமான பலரும் கொல்லப்பட்டுள்ளனர். புதிய தலைவராக தேர்வான மொஜ்தபா கமேனியும் காயமடைந்த நிலையில் இருக்கிறார். இந்த சூழலில் யார் தற்போது ஈரானை நிர்வாகம் செய்து வருகிறார்கள் போரை வழி நடத்தி வருகிறார்கள் என்பதே தெரியவில்லை.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version