Close Menu
    What's Hot

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»”பெரியாருக்கு என் கையால் உணவு பரிமாறினேன்” – பெருமை பொங்க பேசிய ஸ்டாலின்
    உலகம்

    ”பெரியாருக்கு என் கையால் உணவு பரிமாறினேன்” – பெருமை பொங்க பேசிய ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 5, 2025Updated:September 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பெரியார் குறித்து தமிழில் நீண்ட உரையாற்றினார். அதில், பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான திமுக தலைவர் என்ற தகுதியோட மட்டுமில்லாமல் பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோட நிற்கிறேன்.

    பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் உருவப்படத்தை இங்கு திறந்து வைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவோட அடையாளம் மட்டுமில்லாமல் மனித உரிமையின் அடையாளம், உலக அடையாளம். அப்படிப்பட்ட இந்த இடத்தில் பெரியார் படம் திறக்கப்பட்டிருப்பது உலகப் பெருமை.

    தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று சொல்லிட்டு இருக்கும் நான் பலமுறை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்க தந்தை பெரியார் வந்தபோது, இந்தக் கையால அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்குள் பெருமை பொங்கி எழுகிறது.

    ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை” என்றார்.

    மேலும், தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சுயமரியாதை இயக்கத்தை பெரியார் சாதாரணமா தோற்றுவிக்கவில்லை. உலகம் முழுக்க பயணம் செய்து அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சொன்னவர் பெரியார்.  பகுத்தறிவை போதித்த பெரியார் வெறும் நம்பிக்கையை கண்டுப்பிடிப்பாக ஏத்துக்கக் கூடாது என்று சொல்லி, எல்லாத்தையும் கேள்வி கேட்கச் சொன்னார்.

    தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கியவர் பெரியார். பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதை பகிரங்கமாக கூறியவர். நகராட்சிப் பள்ளிகள்ல தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார்.

    சமூகநீதி, பெண்களுக்கு சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு, பொது இடங்களில் பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக் கூடாது, நில உரிமை, கைம்பெண் மறுமணம், தமிழுக்கு முக்கியத்துவம், சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு – இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். இதற்காக தள்ளாத வயதிலும் அலைந்து போராடியவர்” என பெரியாரை புகழ்ந்து மு.க.ஸ்டாலின் பேசினார்.

    cm stalin DMK LONDON london periyar potrait MK Stalin periyar stalin london visit
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனம் திறக்கும் செங்கோட்டையன் என்ன சொல்ல போகிறார்? – பரபரப்பில் அரசியல் களம்
    Next Article கட்சியை ஒருங்கிணையுங்கள்.. இபிஎஸ்-க்கு 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.