Close Menu
    What's Hot

    திருப்பூர் : பேஸ்பும் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»தொடரும் வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் இந்திய விசா மையம் மூடல்
    உலகம்

    தொடரும் வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் இந்திய விசா மையம் மூடல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    visa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     வங்​கதேசத்​தின் சிட்​ட​காங் நகரில் உள்ள இந்​திய விசா விண்​ணப்ப மையத்தை மத்​திய அரசு மூடி​யுள்​ளது.

    வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு மாணவர்​கள் நடத்​திய பேராட்​டத்தை தொடர்ந்​து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன்​ பிறகு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்கால அரசு அமைக்​கப்​பட்​டது. மாணவர் போராட்​டத்​துக்கு தலை​மையேற்று நடத்​திய ஷெரீப் உஸ்​மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்​கா​வில் சுடப்​பட்டு உயி​ரிழந்தார்.

    இதையடுத்து, டாக்​கா​வில் நேற்​று ​முன்​தினம் ஹாடி​யின் உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது. இதற்​கிடை​யில், வங்​கதேசத்​தின் பல பகு​தி​களில் வன்​முறை ஏற்​பட்​டது. இந்து இளைஞர் ஒரு​வரை கொடூர​மாக தாக்​கி, மரத்​தில் கட்டி வைத்து எரித்​தனர். இதனால் தொடர்ந்து பதற்​றம் நில​வு​கிறது.

    மேலும், இந்​திய துணைத் தூதர் இல்​லம், அலு​வல​கத்​தின் மீது கற்​கள் வீசி தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதையடுத்து டாக்​கா​வில் உள்ள இந்​திய விசா விண்​ணப்ப மையம் மூடப்​பட்​டது. தற்​போது வங்​கதேசத்​தின் 2-வது பெரிய நகர​மான சிட்​ட​காங்​கிலும், இந்​திய விசா விண்​ணப்ப மையம் நேற்று மூடப்​பட்​டது.

    வங்​கதேசத்​தில் உள்​ளவர்​கள் இந்​தி​யா​வுக்கு வர இந்​திய விசா பெற வேண்​டும். அதற்​கென அமைக்​கப்​பட்​டுள்ள இந்​திய மையங்​களில் விசா விண்​ணப்​பங்​கள் அளிக்க வேண்​டும். அதைப் பரிசீலித்து இந்​திய தூதரகத்​துக்கு அனுப்பி வைக்​கப்​படும். அதன்​பிறகு தகுதி உள்​ளவர்​களுக்கு குறிப்​பிட்ட காலத்​துக்கு இந்​திய விசா வழங்​கப்​படும்.

    பெரும்​பாலும் மருத்​துவ சிகிச்​சை, வர்த்​தகம் போன்ற வற்றுக்​காக வங்​கதேசத்​தினர் இந்​தியா வரு​கின்​றனர். இந்​திய விசா மையங்கள் மூடப்​பட்​டுள்​ள​தால், அவர்​களுக்கு விசா கிடைப்​பது சிக்​கலாகி உள்​ளது. அடுத்த உத்​தரவு வரும் வரை​யில் சிட்​ட​காங் இந்​திய விசா விண்​ணப்ப மையம் மூடப்​பட்​டிருக்கும் என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

    பொய் செய்திக்கு கண்டனம்: இந்தியாவுக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வங்கதேச இடைக்கால அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாஸ் கொலையை கண்டித்து இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் 25 இளைஞர்கள் கோஷமிட்டனர்.

    ஆனால், வங்கதேச தூதரகத்துக்கு, உள்ளே நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்றதாக வங்கதேச பத்திரிகைகள் தவறாக செய்திகள் வெளியிட்டன. அதுபோல் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அங்கிருந்த இளைஞர்களை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் பொதுவெளியில் உள்ளன. அவற்றைப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடரும் வன்முறை எதிரொலி:  வங்கதேசத்தில் இந்திய விசா மையம் மூடல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாறுகிறதா?
    Next Article இன்ஜின் திடீரென செயலிழப்பு… ஏர் இந்தியா விமானம் டில்லியில் அவசர தரையிறக்கம்
    Editor TN Talks

    Related Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் : பேஸ்பும் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த கும்பல்..! மிரட்டலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட பீகார் இளைஞர்..!

    116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறிய மூதாட்டி..! ஏழுமலையானை தரிசனம் செய்த காட்சிகள் வைரல்..!

    ஃபிஃபா அப்டேட் : பராகுவேவை பந்தாடிய பிரான்ஸ்..! கடைசி நேரத்தில் கோல் அடித்து வெற்றி..!

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.