அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நீண்டநாள் வாக்குறுதியான கோல்டு கார்டு’ என்ற விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். . இது, 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டில் பிறந்த ஒரு ஊழியருக்கு இரண்டு மடங்கு தொகையைச் செலுத்தும் நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் குடியிருக்க சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கும்.

டிரம்ப் கோல்டு கார்டு என்பது, அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கும் செல்வந்தர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியிருக்கும் உரிமை வழங்குகிறது. இதன் நோக்கம், நாட்டிற்கு வருவாயை ஈட்டுவதும், தற்போதுள்ள இபி1 மற்றும் இபி2 விசாக்களுக்கு பதிலாக ஒரு புதிய வழியை உருவாக்குவதாகும்.

அதன்படி, தனது நீண்டநாள் வாக்குறுதியான ‘கோல்ட் கார்டு’ அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துவிட்டதாக டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டில் பிறந்த ஒரு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் சட்டப்பூர்வ அந்தஸ்தும், இறுதியில் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான வழியும் வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து “விண்ணப்பங்களைப் பெறும் ஒரு இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. “இது EB-5 விசாக்களை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக 1990-ல் உருவாக்கிய அந்த EB-5 திட்டம், குறைந்தது 10 பேருக்கு வேலை வழங்கும் ஒரு நிறுவனத்தில் சுமார் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நபர்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது.”

இந்த திட்டத்தை அமெரிக்காவுக்கு சிறந்த திறமைகளை கொண்டு வரவும், அவர்களை தக்க வைத்திருக்கவும் உதவும் வழியாகவும், அதேசமயம் கூட்டாட்சி அரசுக்கு வருவாய் சேர்க்கும் வழியாகவும் டிரம்ப் பார்க்கிறார். அதனால் தான் பல மாதங்களாக ‘கோல்ட் கார்ட்’ திட்டத்தை விளம்பரப்படுத்தி வரும் டிரம்ப். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு கார்டும் 5 மில்லியன் டாலர் ஆகும் என்று அவர் கூறியிருந்தாலும், சமீபத்தில் அதை 1 மில்லியன் மற்றும் 2 மில்லியன் டாலர் எனும் விலை அமைப்பாக மாற்றினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து நிதிகளும் “அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்” என்று அதிபர் கூறினார். மேலும், கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் பில்லியன் கணக்கான டாலர்கள் வந்து சேரும் என்றும், “அதன் மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும்” என்றும் டிரம்ப் கூறினார். இந்த புதிய திட்டம் உண்மையில் ஒரு கிரீன் கார்டு போன்றது; இது குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்புடன் நிரந்தர சட்டப்பூர்வ வசிப்பிடத்தை வழங்குகிறது.

அடிப்படையில், இது ஒரு கிரீன் கார்டுதான், ஆனால் அதைவிட மிகவும் சிறந்தது, என்று டிரம்ப் கூறினார். “மிகவும் சக்தி வாய்ந்தது, மிகவும் வலிமையான ஒரு பாதை ஆகும் என்று விவரித்தார்.

இருப்பினும், தற்போதைய EB-5 திட்டத்தின் கீழ் உள்ளபடி, விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் தேவைகள் குறித்தோ அல்லது திட்டத்திற்கான ஒட்டுமொத்த வரம்புகள் குறித்தோ டிரம்ப் எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து சிறந்த பட்டதாரிகளைப் பணியமர்த்த முடியாத வணிகத் தலைவர்களிடமிருந்து புகார்களைக் கேட்டதாக அவர் கூறினார். ஏனெனில் அந்தப் பட்டதாரிகள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்காவில் தங்குவதற்கான அனுமதி அவர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version