10-வது நாளாக இன்று (டிச. 11) சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 8 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சேவையால் இண்டிகோ நிறுவனம் கடும் விமர்சனத்தையும், பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றது.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று (டிச. 10) சிங்கப்பூர், பாங்காக், பினாங்கு, குவைத், மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 33 இண்டிகோ விமானங்களும், சென்னைக்கு வரவேண்டிய 37 விமானங்களும் என மொத்தம் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தாலும் பயணிகள் முன்பதிவு ரத்து போன்ற காரணங்களால் விமான சேவையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 10வது நாளாக புறப்பட வேண்டிய 24 விமானங்களும், வருகை தர வேண்டிய 12 விமானங்களும் என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று (டிச. 10) 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டநிலையில், இன்று பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version