முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் புரதம், வைட்டமின்கள் (ஏ, டி, ஈ, கே, பி), தாதுக்கள் (இரும்பு, செலினியம், துத்தநாகம்) மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற விழிப்புணர்வு பெருகி வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் இதனைத் தங்களது தினசரி உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

இருப்பினும், “தினமும் முட்டை சாப்பிடலாமா? கொழுப்பு அதிகரிக்குமா? சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?” என்ற கேள்வி பலரிடையே எழுவது இயற்கையே. இந்த விவாதமானது, முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் அதன் பலன்கள் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் எழுகிறது. எனவே, தினமும் முட்டை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா, அதன் மூலம் உடல் எடை குறைப்பு, தசை வளர்ச்சி, கண் ஆரோக்கியம் போன்ற நன்மைகள் ஏற்படுமா அல்லது கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பதைப் பற்றி விரிவாக அறிவது அவசியமாகிறது.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள்: முட்டையில் நிறைந்துள்ள பலவிதமான வைட்டமின்கள் பல நன்மைகளைத் தருகின்றன. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பயோட்டின் (Biotin), மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க மிகவும் நல்லது.

புரதம்: முட்டைகள் தசைகளைப் பராமரிக்கவும், திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதியில் காணப்படும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இதில் நிறைந்துள்ளன. முட்டையின் புரதம், குறிப்பாக, அதன் உயர்ந்த உயிரியல் மதிப்புக்காக (Biological Value – BV) அறியப்படுகிறது. இது உடலால் புரதம் எவ்வளவு திறமையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அளவிடுகிறது.

வயிறு நிரம்பிய உணர்வு: SENS கிளினிக்கின் விளையாட்டு மற்றும் செயல்பாட்டு ஊட்டச்சத்து நிபுணர் தீபக் பால் கூறுகையில், “முட்டைகள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், அதிக உணவு உட்கொள்ளல் அல்லது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை தேவையில்லாமல் சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவுகின்றன. பசியைக் குறைப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது, இது உணவு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது. சில மருத்துவ வல்லுநர்கள், உணவு இடைவேளைகளில் க்ளூட்டன் கலந்த உணவுகளையோ அல்லது துரித உணவுகளையோ சாப்பிடுவதற்குப் பதிலாக முட்டையைச் சாப்பிடுவது ஒரு சிறந்த யோசனை என்கின்றனர்.

சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்: லுடீன் (Lutein) மற்றும் புரதம் ஆகியவற்றால் நிறைந்துள்ள முட்டைகள், முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், சுருக்கங்கள், மெல்லிய கோடுகள், சொரசொரப்பான தோல், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பு போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. மேலும், அவை சருமத்தின் தோற்றத்தை பிரகாசமாக்குகின்றன.

இது தவிர, ஃபோலேட், புரதங்கள், பயோட்டின், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால், முட்டைகள் முடிக்கு அடர்த்தியைச் சேர்க்கின்றன. முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் முடிக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு, முடியின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.

கோலின் மற்றும் ஒமேகா-3: முட்டையில் கோலின் மற்றும் ஒமேகா-3 ஆகியவை ஏராளமாக உள்ளன. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் (முட்டையின் மஞ்சள் கருவை 7-8 மாதங்களில் இருந்து கொடுக்கலாம்) மற்றும் அனைத்து வயதினரும் இவற்றைச் சாப்பிடலாம். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கண்கள், மூளை, இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நேர்மறையாகப் பங்களிக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, முட்டைகள் கருவின் வளர்ச்சிக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில் அவை மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிப்பதைத் தவிர, கோலின் கொழுப்பைக் கடத்துவதற்கும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதேசமயம் ஒமேகா-3 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

கண் ஆரோக்கியம்: மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறைத் தலைவர் டாக்டர் கீதா புர்யோக் கூறுகையில், “பச்சை இலைக் காய்கறிகளில் அதிகமாகக் காணப்படும் ஜீசாந்தின் (Zeaxanthin), துத்தநாகம் (Zinc) மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் காணப்படுகின்றன.

முட்டை சாப்பிடுவது வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் (Age-related Macular Degeneration – AMD) தடுக்க உதவும். மேலும், முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், அவை பார்வை தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொடர்ந்து முட்டை சாப்பிடுவது கண்புரை ஏற்படுவதைக் கணிசமாகக் குறைக்கும்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version