மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், செல்போன் பயன்பாடுகளின் காரணமாக இன்று ஒவ்வொருவரும் இருந்த இடத்திலேயே இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், ஆபாச இணையதளங்களின் பயன்பாடு, புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது என இணையதளத்தின் தீங்குகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

Parental window என்ற மென்பொருளை பயன்படுத்தி சிறார்கள், தவறான இணையதள முகவரிகளை குறிப்பாக புளுவேல் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுகள், ஆபாச இணைய தளங்களை பார்க்க முடியாமல் அந்த இணைய தள முகவரியை பெற்றோர்கள் தடை செய்து கட்டுபடுத்தலாம். இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு மத்திய தொலைதொர்பு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .

ஆகவே, இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள், Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள், Parentel window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இது வரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள்? என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள் என மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Share.

1 Comment

Leave A Reply

Exit mobile version