நம் அனைவருக்கும் சிறுவயதில் இருந்து ஏன் இப்பொழுது வரை உப்புக் கடலை பாக்கெட்டை வாங்கி உண்பது வழக்கமான விஷயம். ஆனால் இனி உப்புக்கடலை வாங்கி உண்ணும் விஷயத்தில் சற்று கவனமாக நாம் இருக்க வேண்டும்.
சமீபத்தில் உப்புக்கடலை தயாரிக்கும் ஒரு சில இடங்களில் உப்புக்கடலை மீது ஆரமைன் என்கிற கெமிக்கல் ரசாயனத்தை தெளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உப்புக்கடலை மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாம் அனைவரும் அதில் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை தான் தெளித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் விஷயம் அப்படி இல்லை.
ஒரு சில தொழிற்சாலைகளில் உப்பு கடலை தயாரிக்கும் பொழுது இந்த ஆரமைன் என்கிற கெமிக்கல் ரசாயனத்தை உப்புக்கடலை மீது தெளிக்கின்றனர். இதன் மூலம் உப்புக் கடலை பார்ப்பதற்கு நல்ல பளபளப்பாக இருக்கும். ஆனால் அந்த கெமிக்கல் ரசாயம் உடல் நலத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும்.
ஆரமைன் என்பது ஒரு செயற்கை சாயம். அதை பேப்பர் லெதர் மற்றும் பெயிண்ட் ஆகிய பொருட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களில் அதை நிச்சயமாக பயன்படுத்தவே கூடாது. இதை உணவுப் பொருட்களில் பயன்படுத்தினால் உடலுக்கு பல தீங்குகளை இது விளைவிக்கும். இந்த கலந்த உணவை உண்ணும் வேளையில் நம் உடலில் கல்லீரல், மூளை மற்றும் நரம்புப் பகுதிகளில் மிகப்பெரிய சேதாரத்தை உண்டு செய்யும். உடலில் கேன்சர் நோயை வர வைக்கும் அளவிற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வாய்ந்த ரசாயனம் இந்த ஆரமைன் ஆகும்.
இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மக்களிடையே நாளுக்கு நாள் எழுந்து வருகின்றன. இருப்பினும் சுகாதாரத்துறை இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்கும். சுகாதாரத்துறை நடவடிக்கை ஒரு பக்கம் எடுக்கும் வேளையில் மறுபக்கம் நாம் உண்ணக்கூடிய உணவுகளை சரியாக பார்த்து உண்ண வேண்டும் என்பதே இறுதி கருத்து.
