உலகின் மிகக் குளிரான நகரம் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூமியில் பல குளிர் பிரதேசங்கள் உள்ளன, ஆனால் தீவிர வானிலை நிலைகளைப் பொறுத்தவரை, யாகுட்ஸ்க் முதலிடத்தில் உள்ளது. சைபீரியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள் தொகை தோராயமாக 3,55,000 பேர் ஆகும். ஆண்டின் பெரும்பாலான நாட்கள் குளிர்காலம் நிலவுவதால், யாகுட்ஸ்கில் உள்ள வெப்பநிலை மனிதர்களின் சகிப்புத்தன்மை மற்றும் தகவமைப்பு வரம்புகளை மீறுகிறது.

BBC Science Focus தகவலின்படி, யாகுட்ஸ்க் நகரில் ஜனவரி மாதத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை –42 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகிறது. மேலும், அந்த காலகட்டத்தில் நகரத்திற்கு தினமும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே சூரியஒளி கிடைக்கிறது. வரலாற்றில் யாகுட்ஸ்கில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 1891 பிப்ரவரி 5ஆம் தேதி –64.4 டிகிரி செல்சியஸ் ஆகும்.

ஆடைகள், கார்கள் உட்பட வெளியே விடப்படும் எந்தப் பொருளும் சில வினாடிகளிலோ அல்லது நிமிடங்களிலோ உறைந்துவிடுகின்றன. “சந்தைகளில் உள்ள மீனும் இறைச்சியும் இயற்கையாகவே உறைந்த நிலையில் இருக்கின்றன, ஏனெனில் வெளியிலுள்ள காற்று எந்தவொரு குளிர்சாதனப் பெட்டியையும் விட மிகவும் குளிராக இருக்கிறது,”

மக்கள் தங்கள் கார்களின் என்ஜின்களை எல்லா நேரமும் இயக்கி வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அவை சில நிமிடங்களில் உறைந்துவிடும். வெளியே செல்வதற்கு, ஒரு சராசரி நபர் பல அடுக்குகளைக் கொண்ட சுமார் 22 பவுண்டுகள் எடையுள்ள ஆடைகளை அணிய வேண்டியுள்ளது. உடலில் வெளியே தெரியும் ஒரே பகுதி கண்களைச் சுற்றியுள்ள பகுதிதான். “அதற்குக்கூட கவனமான பாதுகாப்பு தேவையாக உள்ளது.

மேலும், யாகுட்ஸ்க் சைவ உணவு உண்பவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல, ஏனெனில் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பது அரிது. இங்கு இறைச்சியே உணவின் முக்கிய அங்கமாக உள்ளது. யாகுட்ஸ்கில் இருக்கும்போது, ​​மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் அவை திறந்த வெளியில் சில நிமிடங்களிலேயே செயலிழந்துவிடக்கூடும்.

யாகுட்ஸ்க் “உலகின் மிகக் குளிரான நகரம்” என்று அழைக்கப்பட்டாலும், அது வட துருவத்திற்கு மிக அருகில் உள்ள நகரம் அல்ல. யாகுட்ஸ்க் எந்தவொரு மிதமான கடல்சார் தாக்கங்களிலிருந்தும் வெகு தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஓகோட்ஸ்க் கடலில் இருந்து தோராயமாக 725 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குளிர்காலங்களில், சைபீரியா உயர் அழுத்த அமைப்பான ‘சைபீரியன் ஹை’யை அனுபவிக்கிறது. இந்த காலகட்டத்தில் யாகுட்ஸ்க் மிகக் குறைந்த சூரிய ஒளியையே பெறுகிறது. யாகுட்ஸ்க் நிரந்தர உறைபனி கொண்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளது, அதாவது அதன் தரைப்பகுதி நிரந்தரமாக உறைந்தே இருக்கும்.

 

 

 

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version