virus
நம்முடைய சில பொதுவான பழக்கவழக்கங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் பழக்கங்களை மாற்றி, ஆரோக்கியத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.சில பொதுவான பழக்கவழக்கங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் பழக்கங்களை மாற்றி, சிறிய மாற்றங்களை செய்வது ஆரோக்கியத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
போதுமான நேரம் தூங்காமல் இருப்பது: நள்ளிரவு வரை அல்லது நள்ளிரவு கடந்தும் தூங்காமல் இருப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக பாதிக்கிறது. தூங்கும் போது, ​​நம் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்து, மீண்டும் கட்டியெழுப்பும். போதுமான தூக்கம் இல்லாதால், உடலுக்கு இந்த முக்கியமான வேலையைச் செய்ய போதுமான நேரம் கிடைக்காது. ஒருநாளில் 7-8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது, உடல் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது கடினமாக்கும்.
தீர்வு: எல்லா நாளிலும் ஒரே நேரத்தில் தூங்க செல்வது, காலை ஒரே நேரத்தில் எழுவது என சீரான தூக்க அட்டவணையை பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் ஓய்வெடுக்க ஒரு நிதானமான தூக்க நேர வழக்கத்தை உருவாக்குங்கள்.
அதிக மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தம் ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் போது, ​​உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. நிலையாக இருக்கும் கவலை அல்லது மனஅழுத்தம் உடலின் கிருமிகளுக்கு எதிராக தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் திறனை பலவீனப்படுத்தும்.
தீர்வு: மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வழிகளை கண்டறியவும், உடற்பயிற்சி, தியானம், இயற்கை சூழலில் நேரம் செலவிடுதல் அல்லது நண்பர்களுடன் பேசுதல் போன்றவை அடங்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்த்தல்: பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்மை ஆரோக்கியமாக வைக்க கூடியவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவை வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இவை உடல் தொற்றுகள் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. குறைவாக உள்ள டயட்டை பின்பற்றுவது உடல் வலுவாக இருக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை குறிக்கிறது.
தீர்வு: அன்றாட டயட் மற்றும் ஸ்னாக்ஸ்களில் பலவிதமான வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து கொள்ளுங்கள். அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் ஹீரோக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சியைத் தவிர்ப்பது: தினமும் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்றாலும், வழக்கமான மிதமான உடற்பயிற்சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க சிறந்தது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நோயெதிர்ப்பு செல்கள் உடலில் எளிதாக பயணிக்க உதவுகிறது. உடல் செயல்பாடுகள் இன்றி நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை நோயெதிர்ப்பு மண்டலத்தை மந்தமாக்கும்.
தீர்வு: வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான-தீவிர உடற்பயிற்சி செய்வதை நோக்கமாக கொள்ளுங்கள். இது ஒரு விறுவிறுப்பான நடைப்பயிற்சி, பைக் சவாரி அல்லது உங்களுக்குப் பிடித்த இசைக்கு நடனமாடுவது போன்ற செயல்பாடுகளாக இருக்கலாம்.
கைகளை சரியாகக் கழுவாமல் விடுவது: கைகள் நாள் முழுவதும் எண்ணற்ற கிருமிகளுடன் தொடர்பு கொள்கின்றன. சரியாகக் கழுவாமல் இருந்தால், கிருமிகள் எளிதில் பரவும். சாப்பிடும் போது கைகளை நன்கு கழுவாமல் இருப்பது, எளிதாக உடலினுள் கிருமிகள் பரவி நோய்வாய்ப்படுத்த வாய்ப்புள்ளது.
தீர்வு: பொது இடங்களுக்கு சென்று வந்த பின், சாப்பிடுவதற்கு முன், இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு குறைந்தது 20 வினாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை கழுவுங்கள்.
தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலமும், நன்றாக சாப்பிடுவதன் மூலமும், உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும், நல்ல சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க உதவும்.
Share.
Leave A Reply

Exit mobile version