மதுரையில் வரும் 21-ம் தேதி தவெக-வின் 2வது மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, தவெக என அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. முதன்முறையாக களத்தில் இறங்கவுள்ள விஜய்யின் தவெக-கட்சியின் 2-ம் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள பாரபத்தி என்ற பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக கட்சி நிர்வாகிகள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தி சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர்.

மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வரும் 25-ம் தேதியை தொடர்ந்து 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு என்.ஆனந்த் தரப்பில் கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்வதாக தெரிவித்திருந்தனர். இதனால் தவெக-வின் மாநாடு குறிப்பிட்ட அந்த தேதியில் நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்பதில் சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று வரும் 21-ம் தேதி மதுரையில் தவெக-வின் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version