திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை வைத்து அரசியல் செய்வதை விமர்சித்த சீமான், முருகனும் சிவனும் இந்து கடவுளா?.. வாருங்கள் விவாதிப்போம் என்று சவால் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் ஒரு குன்றில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி கட்சியினரும், பாஜகவினரும் போர்க்கொடி தூக்கினார்கள்.
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பும் அவர்களுக்கு சாதகமாக வரவே அங்கு அவர்கள் சென்று விளக்கேற்ற முயன்றார்கள். ஆனால் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதை காரணமாக காட்டியும், அங்கு 144 தடை விதித்திருப்பதை சொல்லியும் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. எனவே, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சீமான் இன்று செய்தியாளிடம் பேசும் போது இந்த விவகாரம் பெற்றி பேசினார்.
தேர்தல் வரும் போதுதான் இவர்களுக்கு பக்தி வரும்.. போன வருடம் இவர்கள் ஏன் அங்கு விளக்கேத்த செல்லவில்லை?.. எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா?.. அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்தார்கள். அங்கு எடுபடவில்லை ..அந்த தொகுதியிலேயே தோற்றுப் போய் விட்டார்கள்.. தற்போது முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள்..முருகனும் சிவனும் இந்து கடவுளா?.. வாருங்கள் விவாதிப்போம்.
முருகன் என் முப்பாட்டன்.. என் இன இறைவன்… தமிழ் கடவுள்.. மக்களை பாதிக்கும் எந்த பிரச்சனைக்கும் இவர்கள் குரல் கொடுக்க வந்ததில்லை. பல ஏழைகள் வீட்டில் வறுமையில் விளக்கு எரியவில்லை. அங்கெல்லாம் சென்று இவர்கள் உதவுவதில்லை. இஸ்லாமியர்களும், தமிழர்களும் நல்ல உறவில் இருக்கிறோம். இஸ்மாலியன் என் சொந்தம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
