திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்து விவாதிப்பதற்காக காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கணொலி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் காணொலி வாயிலாக பேசிய மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு திமுக உறுப்பினர் சேர்க்கை பரப்புரை என்று மட்டும் நினைக்காதீர்கள். இது தமிழ்நாட்டு மக்களை நம்ம மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்குற ஒரு முன்னெடுப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்றார்.
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்- ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான் என்றார்.
வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ – ‘common DP’-ய கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள் – திமுகவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
உடன்பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் இதுவரை 24 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஒன் – டூ- ஒன் சந்திப்பை நடத்தியிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.