மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருமழிசை, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. எதிர்பாராத இந்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version