என் கேரக்டரயை புரிஞ்சிக்க மாட்றீங்களே என்று கூட்ட மேடையில் பஞ்ச் டயலாக்கை முதல்வர் ஸ்டாலின் பேசியது, திமுகவினரை ஆச்சரியமடைய செய்தது.
திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் இன்று மாலை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய 91 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பங்கேற்பதற்காக, திருவண்ணாமலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான மேல் செங்கத்தில் இருந்து வழிநெடுகிலும் கரகம், தப்பாட்டம், செண்டை மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலிக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசாக வழங்கப்பட்டது. இதையடுத்து பேசிய முதலைமைச்சர் ஸ்டாலின், முதலில் உங்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் யங்காகாக, மாஷாக, கெத்தாக இங்கு வந்திருக்கும் திரவிடியன் ஸ்டாக்ஸ் அனைவருக்கும் வணக்கம். உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு 50 ஆண்டுகள் டைம் டிராவல் பண்ணி பின்னால் போனது போல் உள்ளது. உங்களைப் போல் இளைஞனாக கிராமம், கிராமமாக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இந்த இளைஞரணி வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது.
திமுக இளைஞரணியை வளர்த்தெடுக்கும் பணியை தம்பி உதயநிதி கிட்டையும் உங்ககிட்டையும் ஒப்படைத்திருக்கிறோம். அவர் தன்னோட பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லா செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இறங்கி அடிக்கிறார். கொள்கை எதிரிகள் உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ் என்று புலம்புறாங்க. அந்த அளவுக்கு கொள்கையில் ஸ்ட்ராங்கா இருக்காரு. கழகத்திற்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி என்று தெரிவித்தார்.
இந்தியாவிலேயே பாஜகவிற்கு எதிராக கொள்கை ரீதியாக போராடி கொண்டிருக்கும் ஒரே மாநில கட்சி நாம் தான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். பிகாரை வென்றுவிட்டோம், அடுத்த டார்கெட் தமிழ்நாடு என்று அமித் ஷா கூறுகிறார். அமித் ஷா மட்டுமல்ல் அவரது படையே வந்தாலும் தமிழ்நாடை வெல்ல முடியாது. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே! அன்போட வந்தால் அரவணைப்போம். ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
