ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மாவட்ட எஸ்.பி அனுமதி அளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 18ஆம் தேதி விஜய்யின் பிரச்சாரம் நடைபெற அவர் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கினார். அப்போது பேசிய செங்கோட்டையன், நிபந்தனைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.
பிரச்சாரம் நடைபெற உள்ள இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்தார். பிரச்சாரத்தில் யாரேனும் கட்சியில் இணைவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் தான் ஈரோட்டில் வருகிற 18ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விஜய்க்கு மாவட்ட எஸ்.பி சுஜாதா அனுமதி அளித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த ரூ.50 ஆயிரம் வாடகை என்றும், அதேபோல் ரூ.50 ஆயிரம் டெபாசிட் என்ற நிபந்தனையும் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ஈரோட்டில் அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version