தேர்தல் ஆணையத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி, பிரதமர் மோடி சட்டத்தை மாற்றிவிட்டதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்வதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ‘வோட் சோர் காடி சோட்’ என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, தனது கட்சி “சத்தியத்துடன்” நிற்கிறது என்று கூறி, “நரேந்திர மோடி-ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தை” அதிகாரத்தில் இருந்து அகற்றுவதாக சபதம் செய்தார்.

தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய ராகுல், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பாஜகவுக்காக வேலை செய்வதாக குற்றம் சாட்டினார். “பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தல் சமயத்தில் அங்குள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 10 ஆயிரம் அனுப்பப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, தொடர்ந்து அவர்கள் தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தேர்தலின் போது பாஜக ரூ.10,000 பரிமாற்றம் செய்ததாகவும், ஆனால் தேர்தல் குழு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ராகுல் மேலும் குற்றம் சாட்டினார். “உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான இந்த போராட்டத்தில், தேர்தல் ஆணையம் பாஜக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது,” என்று அவர் கூறினார். மோடி தேர்தல் ஆணையத்திற்கு விதிவிலக்கு அளிக்க ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார்; நாங்கள் இந்தச் சட்டத்தை பின்னோக்கி மாற்றி தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்று ராகுல் மேலும் கூறினார்.

இதற்கு நேரம் ஆகலாம், ஆனால் இறுதியில் உண்மை வெல்லும் என்று கூறிய அவர், “மோடி மற்றும் அமித் ஷாவை தோற்கடிக்க உண்மை மற்றும் அகிம்சையுடன் நாங்கள் செயல்படுவோம்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version