கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தமிழ்நாட்டின்,சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமான ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து அரசால் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்படிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் தொடர் முயற்சி பலனளித்திருக்கிறது. பிரதமருக்கு மனமார்ந்த நன்றிகள் எனக் கூறியுள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டின், சோழப்பேரரசின் பல்வேறு மத நம்பிக்கைகளை மதிக்கும் தன்மைக்குச் சான்றாக உள்ள இச்செப்பேடுகள் தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து எனக் குறிப்பிட்டு,
ஒன்றிய அரசு இதை உடனடியாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதைப்பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த போற்றுதலுக்குரிய வரலாற்று ஆவணமான செப்பேடுகள் சொல்லும் செய்தியான மத சகிப்புத்தனமையை பிரதமர் மோடி அவர்களும்,பாஜகவும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஜோதிமணி கூறியுள்ளார்.
