டிகர் தனுஷின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வக் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக செயல்படுத்தி வருகிறார். கல்வி உதவி, ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரசிகர் நற்பணி இயக்கத்தின் புதிய அதிகாரப்பூர்வக் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் அடையாளத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொடி, இனி மாநிலம் முழுவதும் நடைபெறும் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகள் மற்றும் நற்பணி நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடி அறிமுகத்துடன் வெளியிடப்பட்ட “எண்ணம் போல் வாழ்க்கை… எண்ணம் போல் தான் வாழ்க்கை!” என்ற வாசகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் புதிய கொடியின் படங்களைப் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், புதிய அடையாளத்துடன் ரசிகர் நற்பணி இயக்கத்தின் சமூக சேவைகள் இன்னும் தீவிரமாக தொடரும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version