தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த 13 பேரின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருப்பதாலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளர் என்று a மற்றும் b படிவங்களில் கையெழுத்து போட்டிருப்பதால்
அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி கோரிக்கை வைத்தார்.. ஆனால் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

இதை தொடர்ந்து
திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகின்றனர்.

வேட்பு மனுக்களை திரும்பப்பெற 12 ஆம் தேதி கடைசி நாள் அன்று மாலை 3 மணிக்கு பிறகு மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ள கமலஹாசன், வில்சன், சல்மா, சிவலிங்கம் உட்பட 6 பேருக்கும் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றுய் எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version