தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்களையும் திமுக அரசு வஞ்சிக்கிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி எண் 313-ல் “சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகப் பணியமர்த்துவோம்” எனப் பொய் வாக்குறுதி கொடுத்து அம்மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த @arivalayam, அரியணை ஏறியதும் வழக்கம் போல அந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது. தூய்மைப் பணியாளர்களைப் போலவே நான்காண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து இறுதியில் பொறுமையிழந்த சத்துணவு ஊழியர்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆளும் அரசின் நிர்வாக அலட்சியத்தை எதிர்த்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் சத்துணவு ஊழியர்களுக்கு தமிழக பாஜக சார்பில் முழு ஆதரவு அளிக்கப்படும் எனவும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு அம்மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version