தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழக கடன் நிலைமை மோசமாகியுள்ளது. கடன் தொகை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறி இருந்தார். இதனை அண்ணாமலை வரவேற்று உள்ளார்.

அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பொய் சொல்வதில் கோபாலபுரம் குடும்பம் முனைவர் பட்டம் பெற்றுள்ளது. இண்டி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளில் ஒருவர் தரவுகளைப் புரிந்து கொண்டு கடன் குறித்து பகிரங்கமாகப் பேசுவது வரவேற்கத்தக்கது.

வெறும் ஐந்து ஆண்டுகளில், திமுக தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியுள்ளது, அதே நேரத்தில் பற்றாக்குறைகளை மறைப்பதற்கும், பெருகிய வளர்ச்சிக் கதைகளை முன்னிறுத்துவதற்கும் கடன்களை வசதியாகப் பயன்படுத்துகிறது.

இருப்பினும், பெரிய கேள்வி என்னவென்றால், திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே உண்மையில் என்ன நடக்கிறது? ஐக்கிய முற்போக்கு கூட்டணி சகாப்தத்தின் மோதல், சண்டை மீண்டும் உருவாவது போல் தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version