பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண் நிர்வாகியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டனார் முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலி .இவர்,பாஜக விவசாய அணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் . சில நாட்களுக்கு முன்பு பாஜகவை விட்டு வைஷாலி நீக்கப்பட்ட நிலையில், தனக்கு நியாயம் கேட்டு வைஷாலி இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்பு கோஷம் எழுப்பினார்.
அப்போது அந்த் பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியதால் முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலி மயக்கமடைந்தார். பின்னர், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி கறுப்புக் கொடி காட்டிய சம்பவம் பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உட்கட்சி குழப்பங்களால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

