திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற ஜுலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதி குறுத்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்க உள்ளார்.