இன்றைய அரசியலில் விளம்பரம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதிலும் சமுக வலைதளங்களில் எங்கு யார் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அடுத்த நொடி உலகம் மெங்கும் அது பரவும். அதேப் போல் நாம் ஒரு விஷயத்தை காப்பி அடித்து செய்தாலும் கூட, அதனை கண்டுபிடித்து விடும் அளவு இன்றைய இளைஞர்களும், தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயினும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, வெற்று விளம்ர மாடல் அரசாக திமுக இருந்து வருகிறது என அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை உண்மையாக்கும் பொருட்டு, திமுகவினர் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பழங்குடி இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளின் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை கையில் ஏந்தி பாரம்பரிய நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவியது.

அங்கு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் சுகுமார் என்பவர் மூலம் பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து தெரியவந்ததாகவும், அதனை கேட்டு வியந்த அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாகவும் திமுகவினர் பதிவுகளை பறக்கவிட்டனர். இதனை கண்ட நெட்டிசன்கள்.. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. இது வெறும் விளம்பரத்திற்காக சித்தரிக்கப்பட்டது தான் என கூறி வருகின்றனர். அதாவது, ஆப்ரிக்காவை சேர்ந்த பழங்குடியின மக்கள், வித்தியாசமான ஒரு தொழிலை உருவாக்கியுள்ளனர்.

நீங்கள் ஒருவரை பாராட்ட வேண்டும், அவர்களை விளம்பரபடுத்த வேண்டும் என்றால், இங்குள்ள பழங்குடியினருக்கு 35 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் வெறும் ரூ.4,000 கொடுத்தால், அவர்கள் உங்களது புகைப்படத்தை பிடித்தப்படி வாழ்த்து பாடி, நடனமாடுவர். அதுபோல் நிறைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதே பாணியில் அவர்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் எடுத்து வெளியிட்டு, அதனை திரித்து முதலமைச்சரை பழங்குடியினர் பாராட்டுவதாக திமுகவினர் பரப்பி வருகின்றனர். ”இதெல்லெம் ஒரு பொழப்பா? எதிர்க்கட்சிகள் வெற்று விளம்பர மாடல் அரசு என கூறுவது சரிதானோ” என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version