இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி, ஏமாற்றிய திமுக அரசுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் திங்கள் கிழமைகளில் BLUE BAND அணியுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக சார்பில் தொகுதி வாரியாக திறந்தவெளி வேனில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவ்வாறு பிரசாரம் மேற்கொண்ட போது, ”இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, அவர்களை வஞ்சித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்த அரசாக இருக்கிறது ஸ்டாலின் மாடல் அரசு.
இதற்கு எதிரான ஒரு Movement-ஆக, மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளை Blue Band அணியுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியிருந்தார்”.
அதன் ஒரு பகுதியாக, கோவையில், அதிமுக சார்பில் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், முன்னதாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் நீலநிற பட்டைகளை அணிந்து விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.