தவெகவில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சேர்ந்தது, தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அதிமுகவில் தற்போது செங்கோட்டையன் இல்லை. ஆதலால் இதுகுறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுகவில் மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழ் மறைக்கப்படுவதாக இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக அவரை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கினார்.

இதனால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version