ராமேசுவரம் அருகே பாம்பன் வடக்கு மீன்பிடித் துறை முகத்தில் மீனவர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உலக மீனவர் தினவிழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் மீனவ மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் புறக்கணித்து வருகின்றன.

மீனவர்களுக்கு வழங்கிய சுனாமி வீடுகளை புதுப்பிக்கவில்ைல. கடற் கரையோரங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, மீனவர்கள் அப்புறப் படுத்தப்படுகின்றனர்.

வரும் காலங்களில் மீனவ அமைப்புகளை ஒன்றிணைத்து, மீனவர்கள் நலனுக்காக தொடங்கப்படும் அமைப்பு அல்லது கட்சியில் என்னை இணைத்துகொண்டு மீனவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படுவேன் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version