கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து வந்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டு, அது தள்ளி போனது.
இந்த நிலையில் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் சென்னையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
